இனவெறுப்பைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டவர் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி
101Shares
101Shares
ibctamil.com

தடை செய்யப்பட்ட Neo-Nazi இணையதளம் ஒன்றை நடத்தி வந்த Ralph Thomas K என்னும் ஜேர்மானியர் இனவெறுப்பைத் தூண்டியதாக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ralph Thomas K, Altermedia Deutschland என்னும் இணையதளம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார்.

5 மில்லியன் பேர் பார்வையிடும் இந்த இணையதளம் இன வெறுப்பைத் தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாக 2016ஆம் ஆண்டு Holocaust Remembrance Day அன்று பல பொலிஸ் ரெய்டுகளுக்குப் பிறகு முடக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 29 வயதான Thomas K, ஜேர்மனியின் தனியுரிமைச் சட்டத்தின்படி இன வெறுப்பைத் தூண்டியதாகவும் குற்றவியல் நிறுவனம் ஒன்றின் தலைவராக செயல்பட்டதாகவும் கைது செய்யப்பட்டு, அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தீவிரவாத இணையதளத்தை நடத்த உதவியதாக மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 48 வயதான ஒரு பெண்ணுக்கு இணையதளத்தில்முக்கியப் பங்காற்றியதற்தாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

64 வயதுள்ள பெண் ஒருவருக்கு 15 மாதங்களும் 62 வயது பெண் ஒருவருக்கு 8 மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தின் உள்ளடக்கமானது வெளி நாட்டவர்கள், அகதிகள் மற்றும் யூதர்களுக்கு எதிரான வன்முறையையும் இன வெறுப்பையும் தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக அரசு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதர மதங்களைச் சார்ந்தவர்கள், தோலின் நிறம் முதற்கொண்டு Holocaustஐ மறுத்தல் வரை பல விடயங்கள் அதில் கூறப்பட்டிருந்தன என்கிறார்கள் அவர்கள்.

தடை செய்யப்பட்ட நாசி வாழ்த்துக்கள் மற்றும் முழக்கங்கள் அந்த இணையதளத்தில் காணப்பட்டன.

Holocaustஐ மறுத்தல் ஜேர்மனியில் தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்