வெளிநாடுகளில் வசிக்கும் பிரித்தானிய மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

15 ஆண்டுகளுக்குமேல் நாட்டை விட்டு வெளியே வாழும் பிரித்தானியக் குடிமக்கள் வாக்களிப்பதற்கு இருந்த தடையை அரசு நீக்கியுள்ளது மக்களுக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு காலம் பிரித்தானியாவை விட்டு வெளியில் வசித்தாலும், ஒரு சட்டத் திருத்தத்தின் வாயிலாக பிரித்தானிய குடிமக்கள் இனி உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்கலாம்.

இந்த சட்டத் திருத்தம் இனி வெளி நாடுகளில் வசிக்கும் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் வாக்களிக்க வகை செய்யும்.

15 ஆண்டுகளுக்குமேல் நாட்டை விட்டு வெளியே வாழும் பிரித்தானியக் குடிமக்கள், வாக்களிப்பதற்கு இருந்த தடை நீண்ட காலமாக பெரும் வெறுப்புக்கு காரணமாக இருந்தது.

குறிப்பாக, ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுவது குறித்த வாக்களிப்பின்போது, அவர்கள் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதாக கருதினார்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசியலமைப்புக்கான அமைச்சர் Chloe Smith, ஒருவர் நாட்டை விட்டு எவ்வளவு தொலைவுக்கு சென்றிருந்தாலும் சரி, நமது ஜனநாயகத்தில் பங்கேற்பது என்பது நமது அடிப்படை உரிமை,

எனவே 15 ஆண்டுகளுக்குமேல், நாட்டை விட்டு வெளியே வாழும் பிரித்தானியக் குடிமக்கள் வாக்களிப்பதற்கு இருந்த தடையை நீக்கியதும், முன்பு பிரித்தானியாவில் வசித்தவர்களை நமது ஜனநாயகத்தில் பங்கேற்க அனுமதிப்பதும் சரியே என்று கூறினார்.

அவர்கள் நம் நாட்டுடன் வலிமையான பிணைப்புடையவர்களாக இருக்கிறார்கள், அவர்களது குடும்பம் இங்கிருக்கலாம், ஒருவேளை அவர்கள் எதிர் காலத்தில் மீண்டும் இங்கு திரும்பி வர திட்டமிட்டிருக்கலாம்.

நவீன தொழில்நுட்பமும், குறைந்த விமானப் பயண செலவுகளும் அவர்களை தங்கள் சொந்த நாட்டுடன் தொடர்பில் வைத்திருக்க உதவியாக இருக்கின்றன என்றார் அவர்.

இது தொடர்பான மசோதா பிப்ரவரி 23 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்