சர்வாதிகாரி ஹிட்லர் தெரியும்.. காதல் மன்னன் ஹிட்லர் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Report Print Harishan in ஜேர்மனி
413Shares
413Shares
lankasrimarket.com

உலகையே அதிரவைத்த சர்வாதிகாரி ஹிட்லர் என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது அவரின் கொடூரமான பக்கங்கள் தான்.

ஆனால் அப்படிப்பட்ட ஹிட்லரின் வாழ்க்கையில் ததும்பியிருக்கும் காதல் மற்றும் அவரது கனிவான பக்கங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஹிடல்ருக்கு 40 வயதாக இருந்தபோது 17 வயது ஈவா என்ற அழகிய இளம் பெண்ணை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையே 23 வருடங்கள் இடைவெளி இருந்தும் ஹிட்லரும் ஈவாவும் ஆத்மார்த்தமாக காதலித்து வந்துள்ளனர்.

உலக அரசியலில் ஓர் சர்வாதிகாரியாக வலம் வந்தபோது, தன்னை ஈவா விரட்டி விரட்டி காதலித்தால், யூதர்களுடன் ஈவாவுக்கோ அல்லது அவரின் குடும்பத்தாருக்கோ தொடர்பு இருக்கலாம் என ஹிட்லருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அதனால் ஒரு சிறப்பு படையை உருவாக்கிய ஹிட்லர், ஈவா குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னரே அவருடன் டேட்டிங் சென்றுள்ளார்.

இது மட்டுமின்றி பல சுவாரஸ்ய தகவல்களை தன் டைரியில் குறிப்பாக எழுதி வைத்துள்ளார் ஈவா.

அதில் ஹிட்லர் விதித்த கட்டளைகளான புகைப்பிடிக்கக்கூடாது, குடிக்கக்கூடாது, நடனமாடக்கூடாது, பொது இடத்தில் யாரையும் சந்திக்கக்கூடாது உள்ளிட்டவையும் அடக்கம்.

ஈவாவுக்கு அவரின் வாழ்க்கையில் இருந்த ஒரு பெரிய ஆசை, இறப்பதற்குள் ஹிட்லரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான். அவர் ஆசைப்பட்டதை போலவே இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

அதாவது, ரஷிய ராணுவம் ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்குள் நுழைந்த தகவல் அறிந்ததும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார் ஹிட்லர்.

அப்போது உடனிருந்த ஈவா, இறப்பதற்கு முன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதையடுத்து இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மேலும், திருமணம் செய்து கொண்ட 40 மணிநேரத்தில் ஹிட்லர் வீட்டிற்கு அடியில் இருக்கும் பாதாள அறைக்கு சென்ற இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்