ஜேர்மனியின்மீது கோபத்திலிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
435Shares
435Shares
lankasrimarket.com

அகதிகள் பிரச்சினையை ஜேர்மனியின் தலைவரான Angela Merkel அணுகும் முறை Romania, Bulgaria மற்றும் Czech Republic போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாக பிரபல அரசியலறிஞர் Ivan Krastev தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அகதிகள் பிரச்சினையின்போது திடீரென்று விதிகளை மாற்றிய Merkel எடுத்த முடிவு பல ஏழை நாடுகளை அகதிகளை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்திற்குள்ளாக்கியது.

அகதிகளையும் புகலிடம் கோருவோரையும் நாடு திரும்பச் செய்யும் பிரச்சினையில் ஒரு நீண்டகால தீர்வை எட்ட சம்மதிக்க ஐரோப்பிய யூனியன் மறுப்பது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆர்வமுடன் ஐரோப்பிய யூனியனில் இணைந்த சிறிய நாடுகள் இப்போது தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஏராளமானோர் புகலிடம் கோரி விண்ணப்பிக்கலாயினர்.

இதையடுத்து ஜேர்மனியில் 1 லட்சத்துக்கும் அதிகமான அகதிகளுக்கு புகலிடம் கொடுக்க Merkel சம்மதம் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டவே, தங்கள் பங்குக்கு அகதிகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஐரோப்பிய யூனியனின் நிதி நிறுத்தப்படும் என்று ஐரோப்பிய யூனியனின் தலைமையகமான Brussels எச்சரித்தது.

Poland, Slovakia மற்றும் Hungary போன்ற நாடுகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தன.

அகதிகள் பிரச்சினை மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பெரும் பிரச்சினை ஏற்படக் காரணமாக உள்ளது என்று Ivan Krastev கூறுகிறார்.

யூரோ பிரச்சினையின்போது ஐரோப்பாவைக் காக்க வேண்டுமென்றால் விதிகளை அனைவரும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறிய ஜேர்மனி இப்போது திடீரென்று விதிகளை மாற்றிக்கொண்டது என்று Ivan Krastev கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்