ஜேர்மன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: டீசல் கார்களுக்கு தடை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
596Shares
596Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் உயர் நீதிமன்றங்களில் ஒன்று Stuttgart மற்றும் Düsseldorf நகரங்களின் முக்கிய பகுதிகளில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு போக்குவரத்துக் குழப்பங்களையும் டீசல் கார்களின் விற்பனையில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்புகள் ஜேர்மனியின் பல நகரங்கள் மீது அவர்களுக்கு மக்களின் நலனைக் காப்பதற்காக காற்று மாசைக் குறைக்கும் கடமை இருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தன.

தற்போது Stuttgart மற்றும் Düsseldorf ஆகிய காற்று மாசு அதிகமுள்ள இரண்டு நகரங்களும் சட்டப்படி பழைய மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை தடை செய்யலாம். ஆனால் இந்த தீர்ப்பு மொத்த ஜேர்மனியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நகரங்களைப் பின்பற்றி மற்ற நகரங்களும் இதேபோல் தடைகளை விதிக்கலாம்.

இந்த தீர்ப்பு குறித்து கார் உற்பத்தித்துறை இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கார் உற்பத்தித்துறை மட்டுமின்றி ஜேர்மனி அரசும் இந்தத் தீர்ப்பு டீசல் கார் வைத்திருப்பவர்களை பாதிக்கும் என அஞ்சுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ஒரு மாற்று நடவடிக்கையாக chancellor Angela Merkel-இன் அரசு, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் ஒரு பில்லியன் யூரோக்களை அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்