ஜேர்மனி சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
207Shares
207Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கடந்தாண்டு நடந்த சூப்பர் மார்க்கெட் தாக்குதல்தாரிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜேர்மனியின் Hamburg பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றினுள் நுழைந்த Ahmad(27) என்னும் பாலஸ்தீனிய நபர் தாக்குதல் நடத்தினார்.

இதில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் குத்திக் கொன்ற வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது ஆறு பேர் காயமடைந்தனர், கொலை, கொலை முயற்சி மற்றும் காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக அவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது அவன் உலகமுழுவதிலுமுள்ள ஜிகாதுக்கு தன் பங்களிப்பை செய்வதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நடைபெற்றபோது பொலிசார் வருவதற்குள் அவன் தப்பிவிடாமல் இருப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே இருந்த புலம்பெயர்ந்தோர் ஏழுபேர் கற்களாலும் சேர்களாலும் குற்றவாளியை தாக்கினர்.

அவனுக்கு ஐ.எஸ் தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை, ஏனென்றால் விசாரணையின்போது அவன் தனது தாடியை எடுத்துவிட்டதோடு நீதிமன்றத்திற்கு வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு வந்த Ahmadக்கு ஏற்கனவே Norway, Sweden மற்றும் Spain நாடுகளில் புகலிடம் மறுக்கப்பட்டிருந்தது.

ஜேர்மனியிலும் புகலிடம் மறுக்கப்பட்ட நாடு கடத்துவது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்