ஜேர்மன் சேன்ஸலரின் தலைவிதி இந்த இளைஞரின் கையில்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
428Shares
428Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பிரபலமாகிவரும் Social Democratic Partyயின் இளம் அரசியல்வாதியான Kevin Kuehnert(28), ஜேர்மன் சேன்ஸலரின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு மக்களிடையே பிரபலமடைந்து வருகிறார்.

அவர், Angela Merkel கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதற்காக தொடங்கியுள்ள NoGroKo என்னும் பிரச்சாரத்தால் ஜேர்மனியில் அரசியல் சூழலே தலைகீழாக மாறலாம் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து 12 ஆண்டுகளாக பதவி வகித்துவரும் ஜேர்மனியின் சேன்ஸலரான Angela Merkel தற்போது Social Democratic Partyயுடன் கூட்டணி அமைத்ததன்மூலமே இன்று பதவியிலிருக்கிறார்.

அடுத்த தேர்தலிலும் அவருக்கு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு தேவை, முக்கியமாக Social Democratic Partyயின் ஆதரவு. அக்கட்சியின் ஆதரவை இழக்கும்பட்சத்தில் அவர் மைனாரிட்டி ஆட்சியை அமைக்க நேரிடலாம் அல்லது பதவியிழக்கலாம்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை அவருக்கு அவரது பிரதான கூட்டணிக் கட்சியிலிருந்தே உருவாகியுள்ளது.

Angela Merkelஉடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட எதிர்க்கட்சியாக இருந்து நாட்டுக்கு எதையாவது செய்யலாம் என்கிறார் Kevin Kuehnert.

வரும் ஞாயிறன்று Social Democratic Partyயில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. Angela Merkelஉடனான கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான வாக்கெடுப்பு அது.

தொடரலாம் என்று வாக்களிக்கப்பட்டால் Angela Merkel நிம்மதியாக மூச்சு விடலாம். இல்லையென்றால் கூட்டணி உடையும் அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியதுதான். 12 ஆண்டுகளாக பதவி வகிக்கும் Angela Merkelஇன் எதிர்காலம் என்னவாகும் என்பது வாக்கெடுப்பிற்குப் பின்தான் தெரியவரும்

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்