ஜேர்மனியில் பூச்சிகள் மூலம் பரவும் மூளைத்தொற்று அதிகம் காணப்பட்ட ஆண்டு எது தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
193Shares
193Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உண்ணிகள் என்று அழைக்கப்படும் பூச்சிகள் மூலம் பரவும் மூளைத்தொற்று கடந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டது.

கடந்த ஆண்டு TBE என்று அழைக்கப்படும் பூச்சிகள் மூலம் பரவும் மூளைத்தொற்றினால் 500 பேர் வரை பாதிக்கப்பட்டதாக Robert Koch Instituteஇன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று Stuttgartயில் நடைபெற்ற Southern German Tick Congressஇல் 86% நோய்த்தொற்றுகள் Bavaria மற்றும் Baden-Württemberg பகுதிகளில் காணப்பட்டதாகவும் Berlin மற்றும் Mecklenburg பகுதிகளில் ஒன்றிரண்டு நோய்த்தொற்றுகள் காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவித்தனர்.

மூளைக்காய்ச்சலுக்கு வழிவகுக்கக்கூடிய TBE, உண்ணிகள் என்னும் பூச்சிகள் மனிதர்களைக் கடிப்பதன்மூலம் பரவுகின்றது.

கடிபடும் 100 பேரில் 30 பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. ஜேர்மனியில் வருடத்திற்கு 250 முதல் 500 பேருக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது. மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் TBEயினால் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

பொதுவாக குறைவான அளவிலேயே உண்ணிகள் காணப்படும் ஜேர்மனியில் அதிக நோய்த்தொற்றுகள் ஏற்படுவது ஆச்சரியம்தான். கடந்த ஆண்டின் 500 பேருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுதான் வரலாற்றிலேயே நிகழ்ந்த இரண்டாவது பெரிய சம்பவம் ஆகும்.

சீதோஷ்ண நிலை இந்நோய்த்தொற்று ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. குளிர்ச்சியான வெப்பநிலைக்குப் பிறகு ஏற்படும் சூடு, உண்ணிகள் பெருகுவதற்கேற்ற சூழலாகும்.

கடுங்குளிருக்குப்பின் இந்த வெப்பநிலையை விரும்பி அனுபவித்த மக்கள் நோய்த்தொற்றையும் பெற்றுக்கொண்டார்கள். இன்னொரு காரணம் நோய்த்தொற்று ஏற்பட்ட ஆட்டின் பாலை பச்சையாக அருந்துவதாகும்.

2017 ஆம் ஆண்டு ஆட்டுப்பாலை பச்சையாக அருந்தியதின்மூலம் 8 பேருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்