ஜேர்மனியில் 4வது முறையாக ஆட்சி அமைக்கிறார் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Kavitha in ஜேர்மனி

ஆறு மாதகால அரசியல் குழப்பதிற்கு பின்னர் இன்று நான்காவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார் ஏஞ்சலா மெர்க்கல்.

ஐரோப்பிய நாடுகளில் வலிமையான நாடாக திகழும் ஜேர்மனியில், கடந்த 2005ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் சான்சலராக பதவி வகித்து வருகிறார்.

மூன்று முறை பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு, இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

மெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது, அகதிகள் விடயத்தில் மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலுக்கு முன்பே பழமைவாத கூட்டணியில் இருந்து விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது, சுமார் 171 நாள் காத்திருப்புக்கு பின் உடன்பாடு எட்டப்பட்டு ஆட்சி அமைக்கிறார் ஏஞ்சலா மெர்க்கல்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்