புலம்பெயர்ந்தோரால் அதிகரித்த ஜேர்மனியின் மக்கள்தொகை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் குறைவாக உள்ள நிலையிலும் அதன் மக்கள்தொகை இரண்டு மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணம் புலம்பெயர்ந்தோரே என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியாவிட்டாலும் தோராயமாக 450,000 பேர் ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையைவிட புலம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை 1.15 மில்லியனாக இருந்தது. 2016இல் அது 500,000ஆகக் குறைந்தது.

என்றாலும் மூன்று ஆண்டுக் கணக்கெடுத்துப் பார்க்கும்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 மில்லியன் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 2016 முடிவில் ஜேர்மனியின் மக்கள்தொகை 82.5 மில்லியனாக இருந்தது.

ஆனால் புலம்பெயர்ந்தோர் இல்லாதிருந்தால் ஜேர்மனியின் மக்கள்தொகை மிகவும் குறைந்திருக்கும், காரணம் 1980களிலிருந்து ஜேர்மனியில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகம் ஆகும். 2016 ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு அதிகம் புலம்பெயர்ந்து வந்தவர்கள் ரோமானியர்கள்.

கடந்த ஆண்டு புலம்பெயர்ந்து வந்தவர்களின் எண்ணிக்கை 222,300 ஆகும். ஜேர்மனிக்கு 2016இல் 179,000 சிரியர்களும் 161,000 போலந்து நாட்டவர்களும்

புலம்பெயர்ந்து வந்துள்ளனர். அதே நேரத்தில் 21,411 ஜேர்மானியர்கள் 2016 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்