முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை: ஜேர்மன் நீதிமன்றம் திட்டவட்டம்

Report Print Harishan in ஜேர்மனி

ஜேர்மனியில் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்ககூடாது என்ற சட்டம் தொடர்பாக குற்றம் சுமத்திய இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதன்மூலம் சாலை விதிகளை மீறுபவர்களையும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்நிலையில் தங்களுடைய மதக்கோட்பாடுக்கு எதிரானதான இருப்பதாக கூறி இஸ்லாமிய பெண் ஒருவர் Karlsruhe நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மதக்கோட்பாடை எவ்வாறு மீறுகிறது? முகத்தை மறைக்காமல் சென்றதால் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து மனுதாரரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.

எனவே குற்றம் சுமத்திய பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்