ஜெர்மனியில் திடீர் வன்முறை: கலோங் வீதிகளில் பரபரப்பு.

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி
320Shares
320Shares
lankasrimarket.com

நேற்று மாலை இரண்டு குழுவினருக்குள் ஏற்பட்ட தகராறால் கலோங் வீதிகள் முழுவதும் பதற்றமாகின.

கலோங்கின் பிஷர் சாலையில் உள்ள ஹாஸ் ஆம் சி என்கிற உணவகத்தின் அருகே 20பேருக்கு நடுவே ஏற்பட்ட சண்டை முற்றி ஒருவருக்கொருவர் அடித்து துன்புறுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் கிடைக்கபெற்று 50க்கும் மேற்பட்ட பொலிசார் அங்கு விரைந்து சென்று வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

டியுஸ்பேர்க்கில் அமைதியான டெக்ஸ்டீனர் குளத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் குர்தாஸ் அல்லது குர்திஸ் பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் குர்திஸ் புத்தாண்டைக் கொண்டாட வந்தததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் ஐவர் தப்பியோடிய நிலையில் ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தின் போது பூங்காவில் இருந்த ஒரு நபரை சட்டவிரோதமாக ஜெர்மனியில் தங்கியிருப்பதர்காகக் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைதிற்கும் வன்முறைக்கும் தொடர்புள்ளதா என்பதை பொலிஸ் தெரிவிக்கவில்லை.

மிகப் பிரபலமான இடம், குடும்பமாக மக்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வரும் பொழுது போக்கு இடத்தில் மக்கள் நிரம்பிய ஈஸ்டர் திங்களன்று இது போன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே போன்றதொரு வன்முறை சம்பவம் கடந்த வாரத்தில் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

இதைத் தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்