பெர்லினில் பார்சல் வெடிகுண்டு: பணம் கேட்டு மிரட்டும் மர்ம மனிதன்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
93Shares
93Shares
lankasrimarket.com

நேற்று பெர்லினில் பார்சல் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனமான DHLஐ பணம் கேட்டு மிரட்டும் மர்ம மனிதன் மீண்டும் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளதாக சந்தேகிப்பதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பரில் Christmas market அருகே இதே நபரால் அனுப்பப்பட்டதாகக் கருதப்படும் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிசார் மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டியதாயிற்று.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பார்சல் வெடிகுண்டு நான்காவது வெடிகுண்டாகும்.

வெடிகுண்டை அனுப்பியவன் பார்சல் டெலிவரி செய்யும் நிறுவனமான DHL இடம் 10 மில்லியன் யூரோ மதிப்புள்ள பிட் காயின்களைக் கேட்டு மிரட்டியுள்ளான்.

கடைசியாக வந்த வெடிபொருட்கள் அடங்கிய பார்சல் Berlin Chamber of Craftsக்கு அனுப்பப்பட்டது.

பார்சலைப் பெற்ற ஒரு பெண் ஊழியர் பார்சலிலிருந்து வயர்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு பொலிசுக்கு தகவல் அளித்தார்.

வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யாமலே செயலிழக்கச் செய்தனர்.

ஜேர்மன் பொலிசார் ஆணிகள் மற்றும் வெடி பொருட்களைக் கொண்ட ஒரு பார்சல் மருந்தகம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டதிலிருந்து அதை அனுப்பிய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

ஓராண்டிற்குமுன் Berlin Christmas marketஇல் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதால் இச்சம்பவங்கள் மக்களை அச்சமுறச் செய்துள்ளன. இதேபோல் நவம்பர் மாதம் Frankfurtஇலுள்ள ஆன்லைன் வர்த்தகர் ஒருவருக்கும் ஒரு பார்சல் வந்தது. அதுவும் இதே நபரால்தான் அனுப்பப்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்