பெர்லின் மாரத்தான் சம்பவம்: ஆறு பேரை விடுதலை செய்தது பொலிஸ்

Report Print Trinity in ஜேர்மனி
54Shares
54Shares
lankasrimarket.com

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் சமீபத்தில் நடந்த மராத்தான் போட்டியில், போட்டியாளர்களை கத்தியால் குத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.

துரிதமாக செயல்பட்டு அசம்பாவிதத்தை முறியடித்த பொலிசார், இவரோடு மொத்தம் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களது இருப்பிடம் மற்றும் வாகனங்களில் சோதனை நடத்திய நிலையில், எதுவும் சிக்காததால் ஆறு பேரையும் பொலிசார் விடுதலை செய்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் Horst Seehofer பொலிசாரின் துரித நடவடிக்கையை பாராட்டியதுடன், எந்நேரத்திலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதற்றமான சூழலில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வன்முறை தாக்குதல் நடக்கலாம் என தகவல்கள் வந்த நிலையில், 18லிருந்து 21 வயதுடைய இளைஞர்களை தடுத்து வைத்ததாக பெர்லின் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 36,000 பேர் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியில் 630 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவருக்கு, 2016 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சந்தை விபத்து ஏற்படுத்திய அம்ரிஸ் அலியுடன் தொடர்பு இருப்பதாக Die Welle மற்றும் DerTagesspiegel நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்