போதை மருந்து செலுத்தி பெண்ணுடன் உறவு கொண்ட மருத்துவர் கைது

Report Print Trinity in ஜேர்மனி
455Shares
455Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் தலைமை மருத்துவர் ஒருவர், பெண்ணின் அனுமதியின்றி போதை மருந்து செலுத்தி உடலுறவு கொண்டதில் அப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் உள்ள Harzer Clinic-க்கிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 20ம் திகதி Harzer Clinic-க்கை சேர்ந்த தலைமை மருத்துவர் ஒருவர், பெண்ணின் அனுமதியின்றி போதை மருந்தை செலுத்தி உடலுறவு கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்கு சென்ற பெண் மயங்கி விழவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மரணமடைந்தார்.

இதற்கு முன்பும் இதேபோன்று மூன்று பெண்களுடன் தகாத முறையில் உறவு வைத்திருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் நாடு முழுவதும் பணியாற்றி இருப்பதால், மற்ற எவரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்