ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில் அதிகம்பேர் கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்கள்: ஆய்வு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
184Shares
184Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் கடந்த ஆண்டு வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கிழக்கு ஐரோப்பிய நாட்டவர்கள் அதிகம்பேர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்ததே காரணமாக அமைந்ததாக அரசின் புள்ளி விவரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் இறுதியில் 10.6 மில்லியன் வெளி நாட்டவர்கள் ஜேர்மனியில் பதிவு செய்துள்ளதாக Central Register of Foreignersஇலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 2016 முதல் வெளி நாட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனிலிருந்து 10.6 மில்லியனாக அதிகரித்திருப்பது உண்மை என்றாலும் 2013 அகதிகள் பிரச்சினைக்கு முன் இருந்த வளர்ச்சி விகிதமும் இதே அளவில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளல்லாத சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 2017இல் கணிசமாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஜேர்மனிக்கு வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சரியான எண்ணிக்கையைக் கூற வேண்டுமானால், போலந்திலிருந்து 85,000 பேரும், Romaniaவிலிருந்து 85,000 பேரும், பல்கேரியாவிலிருந்து 45,000 பேரும் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளனர்.

2007ஆம் ஆண்டில் 919,000 ஆக இருந்த போலந்து, Romania மற்றும் பல்கேரியா நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் 2.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 439,000ஆகக் காணப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்