நைஜீரியாவில் ஜேர்மன் ஊழியர் கடத்தல்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
48Shares
48Shares
lankasrimarket.com

நைஜீரியாவில் ஜேர்மனை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்த தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறும் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களுக்கு ஜேர்மனை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனம் சேவை செய்து வருகிறது.

இந்நிலையில் டில்லாபேரி பகுதியில் அயோரோவ் நகரில் ஜேர்மன் ஊழியர் உட்பட ஐந்து பேரை தீவிரவாதிகள் ஆயுத முனையில் கடந்த 11ம் திகதி கடத்தி சென்றனர்.

இவர்களில் உள்ளூர்வாசிகள் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியரின் கதி என்னவானது என தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்