நம்பிக்கையை இழந்து விட்டோம்: காணாமல் போன ஜேர்மனி கோடீஸ்வரரின் குடும்பத்தார் உருக்கம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
191Shares
191Shares
lankasrimarket.com

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்குப் பயிற்சிக்காக சென்ற ஜேர்மனி கோடீஸ்வரரான கார்ல்-எரிவன் ஹாபை இனி உயிருடன் பார்ப்போம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

Tengelmann பல்பொருள் அங்காடிக் குழுமத்தின் வாரிசான கார்ல்-எரிவன் கடந்த சனிக்கிழமை சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுக்கு பனிச்சறுக்குப் பயிற்சிக்காக சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

பனிப்பாறை பகுதிகளில் உள்ள மோசமான சீதோஷ்ண நிலையின் காரணமாக, காணாமல்போய் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இனி கார்ல்-எரிவன் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாக Tengelmann பல்பொருள் அங்காடிக் குழுமம் அவரது குடும்பத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

கார்ல்-எரிவன் ஹாபை உயிருடன் மீட்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையிலும், அவரது உடலைத் தேடும் பணி தொடரும் என்றும் அதற்கான செலவுகள் அனைத்தையும் Tengelmann நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கார்ல்-எரிவன் ஹாபை உயிருடன் மீட்பதற்கான சிறிய வாய்ப்பே இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர், அவர் பனிப்பாறைகளிலுள்ள பிளவு எதிலாகிலும் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காணாமல்போன கார்ல்-எரிவன் 6.4 பில்லியன் டொலர்கள் சொத்துக்களின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்