சிரியா மோதலை முடிவுக்கு கொண்டுவர ஜேர்மனி ஒத்துழைக்கும்: வெளியுறவுத்துறை அமைச்சர்

Report Print Athavan in ஜேர்மனி
108Shares
108Shares
lankasrimarket.com

சிரியாவில் ஏற்பட்டுள்ள மோதலை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சிக்கு ஜேர்மனி அரசு ஒத்துழைக்கும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை பெர்லினில் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அவர் சிரியாவில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் இனி தொடராமல் அங்கு சுமூக நிலையை உருவாக்க உலக நாடுகள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக ஜெர்மனி அரசு இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் சிரியாவில் மோதலை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகளின் சபை தலைமை தாங்கி பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வை எட்ட வேண்டும் எனவும் கூறினார்.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான். அது போரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது இருப்பினும் தொடர்ந்து ரசாயன ஆயுதம் சிரியாவில் உபயோகிப்பதை எந்த நாடும் விரும்பவில்லை.

எனவே சிரியாவில் உள்ள பிரச்சனைக்கு ஆயுதம் மூலம் தீர்வை தேடாமல் பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் மூலமே தீர்வை எட்ட வேண்டும்.

அப்போது தான் சமாதானம் ஏற்படும் என்று ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas அவர் எந்த ஊடக சந்திப்பில் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்