ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மக்கள் வெளியேற்றம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
131Shares

மத்திய பெர்லின் பகுதியில் கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 500 கிலோ எடையுள்ள இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து அதை செயலிழக்கச் செய்வதற்காக அதைச் சுற்றி 800 மீற்றர்கள் வரையுள்ள இடங்களிலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளனர்.

இதில் பெர்லினின் மத்திய ரயில் நிலையம், பொருளாதார அமைச்சகம், தேசிய வரலாற்று மியூஸியம் மற்றும் Charite மருத்துவமனையின் சில பகுதிகளும் அடங்கும்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளரான மார்ட்டின் கூறும்போதுஎவ்வளவு நேரத்திற்கு இது நீடிக்கும் என்றோ டெகல் விமான நிலையம் பாதிக்கப்படுமா என்பது போன்ற விடயங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.

ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை இதேபோல் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த வெடிகுண்டு தானாக வெடிக்காது என்பதால், அதனால் ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போர் நடந்து எழுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் ஜேர்மனியில் வெடிக்காத நிலையிலுள்ள வெடிகுண்டுகள் ஆண்டொன்றிற்கு 2000 டன்கள் வரை கண்டு பிடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு ஃபிரான்க்ஃபர்ட்டில் பிரித்தானிய விமானப்படையால் போடப்பட்ட ஒரு பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்