எமனாக மாறிய குழந்தை கவனிப்பாளர்: குளியல் தொட்டியில் சடலமாக கிடந்த சிறுவன்

Report Print Raju Raju in ஜேர்மனி
316Shares
316Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் குழந்தை கவனிப்பாளர் ஒருவர் 7 வயது சிறுவனை கொலை செய்து குளியல் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kuenzelsau நகரை சேர்ந்த 69 வயதான பெண், குழந்தை கவனிப்பாளர் பணியை செய்து வந்த நிலையில் 7 வயது சிறுவனை பராமரித்து வந்தார்.

இந்நிலையில் அந்த சிறுவன், கவனிப்பாளர் வீட்டில் உள்ள குளியல் தொட்டியில் நேற்று சடலமாக கிடந்துள்ளான்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய அவர்கள் பெண்மணியை கைது செய்தனர்.

சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பின்னர் தண்ணீர் தொட்டியில் போடப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவனை சில ஆண்டுகளாகவே பெண்மணி கொடுமைப்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இனி தான் மற்ற தகவல்கள் வெளியாகும்.

நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணிடம் நடத்த வேண்டிய விசாரணை நிலுவையில் உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்