எரிவாயு நிலையத்தில் புகுந்த கார்: கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Report Print Kabilan in ஜேர்மனி
82Shares
82Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் பெண்ணொருவரின் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், எரிவாயு நிலையத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறித்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனினும், அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். காரின் பின் இருக்கையில் அவரது குழந்தையும் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. குழந்தையை அவர்கள் சிரமமின்றி மீட்டனர். ஆனால், குறித்த பெண்ணை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஏனெனில், கடையில் உள்ள அலமாரி மீது கார் வேகமாக மோதியதால் முன்பக்க கதவுகள் Lock ஆகியிருந்தன. இதனால், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், விபத்தை ஏற்படுத்திய பெண்ணும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பொலிசார் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

alliance/dpa/Feuerwehr Bochum/S.Heussen

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்