ஜேர்மன் முன்னாள் சான்சலரின் காதலி மீது தென்கொரியாவில் வழக்கு

Report Print Fathima Fathima in ஜேர்மனி
157Shares
157Shares
lankasrimarket.com

தென் கொரியாவில் ஜேர்மனியின் முன்னாள் சான்சலரான Gerhard Schroeder-வுன் காதலி மீது அவரது முன்னாள் கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜேர்மனியில் 1998ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை சான்சலராக இருந்தவர் Gerhard Schroeder.

இவருக்கு ஏற்கனவே நான்கு முறை திருமணமான நிலையில் Audi Man மற்றும் The Lord of the Rings என புனைப்பெயரால் அறியப்படுகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவை சேர்ந்த மொழிபெயர்ப்பாளரான Kim So-yeon என்பவரை ஐந்தாவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இருவருக்கும் இடையே 26 வயது வித்தியாசமாகும், இந்நிலையில் Kim So-yeon-ன் முன்னாள் கணவர் தென் கொரியாவின் சியோல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், இருவரும் தங்களுடைய முன்னாள் திருமண உறவு முறியாமல் இருக்கும் போது உறவில் இருந்து வருவதாகவும், இதனால் தான் அடைந்த மன உளைச்சலுக்காக 100 மில்லியன் வோன் பணத்தை நஷ்ட ஈடாக தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kim So-yeon-வுடனான உறவே தம்முடைய திருமண முறிவுக்கு காரணம் என Schroeder-ன் முன்னாள் மனைவி Doris Kopf கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்