பொலிசாருடன் மோதி அகதியை விடுவித்த புகலிடம் கோருவோர்: ஜேர்மனியில் பரபரப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
353Shares
353Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் Ellwangen என்னும் சிறு கிராமத்தில் நாடு கடத்தப்பட இருந்த ஒரு அகதியை விடுவிப்பதற்காக சுமார் 150 புகலிடம் கோருவோர் பொலிஸ் வாகனங்களை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தினர்.

வாகனங்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த அகதியை விடுவிக்குமாறு நிர்ப்பந்தித்து பொலிசாரையும் அவர்கள் தாக்கினர்.

பொலிசார் அவனது கைவிலங்கை அகற்றியதும் டோகோ நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய அந்த அகதி அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

20 பொலிசார் சம்பவ இடத்தில் இருந்தும் அந்த வன்முறையாளர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை, கூடுதல் பொலிசாரை உதவிக்கு அழைக்கவும் முடியவில்லை. பொலிசார் மீதான இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல்வாதிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் நடந்த நேரத்தில் பொலிசார் அமைதியாக நடந்து கொண்டதற்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிறையிலிருந்து நேரடியாக நாடு கடத்தப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை சுமார் 488 கைதிகள் தங்கள் தண்டனைகாலம் முடிந்ததும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்