மேயர் தேர்தல்: வெற்றி பெற்றவரின் மூக்கை உடைத்த நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
124Shares
124Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் Freiburg நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளர் Martin Horn வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு வயது 33. தேர்தல் வெற்றிக்கு பின்னர் நேர்காணல் கொடுத்த இவர், 300 ஆதரவாளர்களுடன் தனது வெற்றியை கொண்டாடியபோது, திடீரென வந்த ஒரு நபர் உங்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இவரும் செல்பி எடுக்க முற்படுகையில், யாரும் எதிர்பாரத வண்ணம் அந்த நபர், மார்ட்டின் மூக்கில் மற்றும் வாயில் ஒரு குத்துவிட்டுள்ளார். இதில் ஒரு பல் வெளியே வந்துள்ளது. மேலும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது,

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 55 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மார்ட்டின் இதிலிருந்து மீண்டு விரைவில் தனது பணிக்கு திரும்ப அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பசுமைக் கட்சி வேட்பாளர் Salomon இந்த நகரில் 16 ஆண்டுகளாக மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்