போர் நினைவுச்சின்னம்: ஜேர்மனியின் புகழ்பெற்ற புராதன பாலம் விற்பனைக்கு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
120Shares
120Shares
lankasrimarket.com

"The Bridge at Remagen" என்று அழைக்கப்படும் இரண்டாம் உலகப்போர் காலத்து பாலத்தின் கிழக்கு முனையில் அமைந்துள்ள டவர்கள் விற்பனைக்கு விடப்படுவதாக ஜேர்மானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பலர் இந்த டவர்களை வாங்க போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். யார் அதிக விலைக்கு ஏலம் கேட்பார்களோ அவர்களுக்கே டவர் விற்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடத்தை விளம்பரப்படுத்தும் இணையதளம் அந்த டவர்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போர் வரலாற்றின் நினைவாக நிற்கும் புராதன பாலத்தின் ஒரு பகுதி என்று வர்ணித்திருந்தது.

இந்த டவர்கள் ஜேர்மானிய நகரங்களான Remagen மற்றும் Erpelக்கு இடையே அமைக்கப்பட்ட Ludendorff பாலத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டன.

1945 ஆம் ஆண்டு நாசி ஜேர்மன் படைகள் பாலத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையிலும் கூட்டணிப்படைகள் இந்த பாலத்தை பயன்படுத்தினர். ரைன் நதியை கூட்டணிப்படைகள் கடக்க இந்த பாலம் உதவியது.

ஆனால் அவர்கள் கடந்த சில நாட்களுக்குப் பின் பாலம் இடிந்தது. இந்த பாலத்தை கூட்டணிப்படைகள் பிடித்தது போரின் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த டவர்களை வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது டவரை வாங்குபவர்கள் அதை பழுதுபார்ப்பதற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதேபோல் டவரை பழுது பார்த்தாலும் அதில் ஹோட்டலோ வீடோ அமைக்க முடியாது.

வேண்டுமென்றால், ஓவியப்பட்டறை அல்லது வரலாற்று நினைவிடம் மட்டுமே அமைக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்