89 வயது பெண்மணியை தீவிரமாகத் தேடும் ஜேர்மன் பொலிசார்: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
620Shares
620Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நாஜிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 89 வயது பெண்மணியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஜேர்மனியில் நாஜிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி விசாரணைக்கு பின்னர் தண்டனை வழங்கப்பட்ட 89 வயது Ursula Haverbeck சிறை தண்டனைக்கு பயந்து தலைமறைவகியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 8 பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்ட குறித்த மூதாட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் சிறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இதுவரை Ursula Haverbeck என்ற நாஜி மூதாட்டி ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மே 4 ஆம் திகதி அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாஜிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் தீவிர வலதுசாரி பயிற்சி முகாமின் தலைமை பொறுப்பில் செயல்பட்டு வந்துள்ளார் Ursula Haverbeck.

குறித்த முகாமானது கடந்த 2008 ஆம் ஆண்டு முழுவதுமாக முடக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பல முறை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு குறித்த மூதாட்டி தொடர்பில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், Auschwitz கொலை முகாமானது வரலாற்று ரீதியாக இதுவரை நிரூபணமாகவில்லை என வாதாடியுள்ளார்.

மேலும் அங்கே யூதர்களை கொன்று குவிக்கப்பட்டதாக கூறப்படுவது வெறும் கற்பனை கதையே எனவும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

ஹோலோகாஸ்ட் எனப்படும் துயரச்சம்பவமானது வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட கற்பனை கதை எனவும் குறித்த மூதாட்டி செய்தி ஊடக விவாதத்தின் போது உறுதிபட தெரிவித்துள்ளார்.

சோவியத் படைகளால் மீட்கப்படும் முன்னர் 1940 முதல் 1945 ஆம் ஆண்டு வரை Auschwitz-Birkenau முகாமில் சுமார் 1.1 மில்லியன் மக்கள், பெரும்பாலும் ஐரோப்பிய யூதர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்