ஜேர்மனியில் குற்றங்கள் குறைந்து விட்டன: அரசு அறிவிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
72Shares
72Shares
lankasrimarket.com

கடந்த ஆண்டிலிருந்ததைவிட ஜேர்மனியில் குற்றங்கள் ஐந்து சதவிகிதம் குறைந்துள்ளதாக ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு 5.76 மில்லியன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் 30 ஆண்டுகளில் தற்போது குற்றங்களின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

குற்ற புள்ளிவிவரங்களை வெளியிட்ட உள்துறை அமைச்சர் Horst Seehofer, ஜேர்மனி பாதுகாப்பான நாடாகிவிட்டது என்று கூறினார்.

அதேபோல் ஜேர்மனியர்கள் அல்லாதவர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 950,000 ஆக இருந்த எண்ணிக்கை 700,000 ஆக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் யூதர்கள் மீதான தாக்குதல்கள் 2017 ஆம் ஆண்டில் 2.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது .

அதாவது 1,504 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் நோக்கம் கொண்ட குற்றங்கள் நான்கு ஆண்டுகளில் 4.9 சதவிகிதம் குறைந்துள்ளதால் மொத்த குற்றங்களின் விகிதம் 0.7 சதவிகிதம் குறைந்துள்ளது. பொதுவாகக் கூறினால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எடுத்துக்கொண்டாலும் கூட பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குற்றமுமே அதிகம்தான் என்று Horst கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்