ஜேர்மனியோடு வர்த்தக யுத்தம் இல்லை: அமெரிக்க தூதர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
108Shares
108Shares
lankasrimarket.com

ஜேர்மனிக்கான தூதராக பொறுப்பேற்றுள்ள Richard Grenell, ஜேர்மனியோடு வர்த்தக யுத்தம் செய்வது அமெரிக்காவின் நோக்கம் இல்லை என்றும் அனைவரையும் சமமாக நடத்தவே டிரம்ப் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பொருட்கள்மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் பெருமளவிலான வரிகள் வர்த்தக யுத்தம் ஒன்றை தூண்டுவதற்காக அல்ல என்று அவர் தெரிவித்தார்.

ஜேர்மானியர்கள் மிகச்சிறப்பாக வர்த்தகம் செய்கிறார்கள் என்றும் நாங்கள் வர்த்தக யுத்தம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்த அவர், ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

வரி விதிப்புக்கான கால வரையறை காலாவதியாக உள்ள நிலையில் அதற்குப் பின் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கும்முன் ஐரோப்பா என்ன திட்டங்களை முன்வைக்கும் என்பதை அமெரிக்கா பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

பதவியேற்ற ஒரு வாரத்திற்குள், அமெரிக்க அதிபர் அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஈரானிலுள்ள ஜேர்மன் நிறுவனங்கள் இடத்தை காலி செய்யுமாறு கூறியதன்மூலம் Grenell தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறியதாக தங்களிடம் ஆதாரம் உள்ளதாகக் கூறியுள்ள அவர் எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளும் ஈரானை மீண்டும் பேச்சு வார்த்தைகளுக்கு கொண்டு வர உதவுவார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்