சட்டவிரோத கார் பந்தய விபத்து: குழந்தைகள் உட்பட பலர் காயம்

Report Print Trinity in ஜேர்மனி
106Shares
106Shares
ibctamil.com

சட்டவிரோதமாக தெரு பந்தயத்தில் ஈடுபட்ட கார் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியதில் அங்கு நின்று கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட பலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மேற்கண்ட விபத்து ஜெர்மன் நகரமான எஸ்சனில் ஒரு மெர்சிடிஸ் காரினால் ஏற்பட்டது.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMW வாகன ஓட்டிகள் இருவர் நகரின் டவுன்டவுன் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூடும் ஒரு பிஸினஸ் ஷாப்பிங் பகுதிக்கு அருகே ஒரு சட்டவிரோத தெரு பந்தயத்தில் பங்கேற்றனர்.

அப்போது லிம்பெக்கர் ஸ்ட்ராஸ் சாலையில் சீறி பாய்ந்த கார் தன் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் அதிலிருந்த பல பாகங்கள் வானில் பறந்தன. அவை அருகே நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது விழுந்தது.

மின் கம்பத்தின் அருகில் நின்று கொண்டிருந்த பாதசாரிகளை காரின் இரும்பு பாகங்கள் வெகு வேகமாக வந்து தாக்கியதில் 2 குழந்தைகள் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட பாதசாரிகள் காயமடைந்தனர்.

இது குறித்து எஸ்சன் காவல்துறை அதிகாரி கூறுகையில் காயமடைந்தவர்களில் ஐந்து வயது சிறுவர்கள் இருவர் பலத்த காயங்கள் அடைந்துள்ளதாக கூறினார்.

மேலும் இது போன்ற சட்ட விரோத தெரு பந்தயங்களை செய்யபவர்களை சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது என்பது அத்தனை எளிதாக இல்லை. இதனை தடுக்கவும் வழக்கு தொடரவும் கடினமாக இருப்பதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த இது போன்ற பந்தய விபத்தில் 69 வயது ஓட்டுனரை கொன்ற காரணத்திற்காக இரண்டு பந்தய வீரர்கள் மரண தண்டனை பெற்றனர். ஆனால் இந்த தண்டனை பிற்பாடு தள்ளுபடி செய்யப்பட்டது.

காரணம் அந்த மரணம் ஏற்பட வேண்டும் என்கிற "நோக்கத்தோடு" இவர்கள் செயல்படவில்லை என்பதால் இவர்களுக்கு தரப்பட்ட மரண தண்டனை ரத்தானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்