ஜேர்மனியில் கார்களுக்கு தீவைத்த மர்ம கும்பல்: 14 கார்கள் சேதம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
171Shares
171Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் Kollwitzplatz பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர், கார்களில் பற்றிய தீ மளமளவென பரவியதில் அருகிலிருந்த கார்களும் சேதமடைந்தன.

மொத்தத்தில் 14 கார்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வேண்டுமென்றேதான் யாரோ இச்செயலை மேற்கொண்டிருக்கவேண்டும் என்று பொலிசார் கருதுகின்றனர்.

26 வயதுள்ள இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிசார் பின்னர் போதுமான ஆதாரம் இல்லாததால் அவர்களை விடுவித்தனர்.

இச்சம்பவத்தின் பின்னால் அரசியல் நோக்கங்களும் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தாலும் அதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை.

ஏற்கனவே கடந்த நான்கு நாட்களாக அதிகாரிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டையடுத்து இடது சாரிகள் “குழப்ப நாட்கள்” நிலவி வருவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் அரசியல் இயக்கங்களுக்கு பெயர் பெற்ற Kollwitzplatz, தற்போது அதன் ஆடம்பர உணவகங்களுக்காகவும் காபி ஷாப்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்