மெக்ஸிகோவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஆயுதங்கள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
122Shares
122Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இருந்து சட்டத்திற்கு புறம்பான முறையில் மெக்ஸிகோவிற்கு ஆயுதங்களை கடத்திய 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Oberndorf நகரில் தயார் செய்யப்படும், Heckler & Koch ரக துப்பாக்கிகள், 16 தொகுப்புகளாக மெக்ஸிகோவிற்கு கடத்தப்பட்டுள்ளன. மெக்ஸிகோவில் நடைபெற்ற வன்முறைகளில் இந்த துப்பாக்கிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

உலகில் நடைபெறும் மோசமான மோதல்களுக்கு இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. மெக்ஸிகோ தவிர, பாகிஸ்தானிலும், மியான்மர் , சவுதி அரேபியா, ஈரான் மற்றும் துருக்கி படையினருக்கும் அனுப்பப்பட்டுள்ளன

இவ்வாறு ஆயுதங்கள் கடத்தப்பட்டதால், ஜேர்மனியின் போர் ஆயுதங்கள் கட்டுப்பாடு சட்டம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக சட்டத்தை மீறியுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்