சட்ட விரோதமாக குடியேறிய நைஜீரியர்களை திருப்பியனுப்ப ஜேர்மனி புதிய திட்டம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
163Shares
163Shares
ibctamil.com

சட்ட விரோதமாக குடியேறிய 30,000 நைஜீரியர்களை அவர்களது நாட்டுக்கு திருப்பியனுப்ப தற்போதுள்ள நடைமுறை திருப்திகரமாக இல்லாததால் அவர்களை திருப்பியனுப்ப ஜேர்மனி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக நைஜீரியாவின் வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் Geoffrey Onyeama தெரிவித்துள்ளார்.

நைஜீரிய தலைநகர் Abujaவிற்கு வருகை தந்த ஜேர்மன் அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் Dr Jan Hecker மற்றும் அவரது குழுவினரை வரவேற்ற Geoffrey இவ்வாறு தெரிவித்தார்.

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் தற்போதுள்ள நடைமுறை மிகவும் மெதுவானதாக இருப்பதால் புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நைஜீரிய தூதரகங்கள் மற்றும் ஜேர்மானிய தூதரக மற்றும் புலம்பெயர்தல் அலுவலகங்கள் பங்கு வகிக்கின்றன.

புதிய திட்டம் “திரும்பி செல்லுதலும் மீண்டும் அனுமதிக்கப்படுதலும்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக Geoffrey தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 30,000 நைஜீரியர்களில் 200 பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய திட்டத்தின்படி யார் அவர்களது சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை ஜேர்மனி முடிவு செய்யும்.

முடிவு எடுக்கப்பட்டபின் அந்த குறிப்பிட்ட நபர்களை ஜேர்மனியிலுள்ள நைஜீரிய தூதரகத்தின் பங்களிப்பு எதுவுமின்றி ஜேர்மனியே நைஜீரியாவுக்கு கொண்டு சேர்க்கும்.

அவர்களை நைஜீரியாவுக்கு கொண்டு வந்து விட்டு, நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முடித்து விட்டோம், இவர்கள் உங்கள் நாட்டு மக்கள், அவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறுவார்கள் என்று Geoffrey தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்