புகலிடக்கோரிக்கையாளர்களின் வரவால் மேயரை கத்தியால் குத்த முயன்ற நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் Altena நகர மேயரை கத்தியால் குத்த முயன்ற நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேயர் Andreas Hollstein - ஐ 56 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இவர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் அளித்துள்ள வாக்குமூலம், நான் எனது வேலையை இழந்துவிட்டேன், இதனால் எனது மனைவியும் என்னை விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.

இதனால், மன அழுத்தத்திற்கு ஆளானேன், இதற்கிடையில் Altena நகரில் 200 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளதை அறிந்து எனக்கு கோபம் வந்தது. ஏனெனில், ஜேர்மன் நாட்டில் உள்ளவர்களுக்கே வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கையில், புகலிடக் கோரிக்கையாளர்களால் எங்களது வேலையும் பாதிக்கப்படுகிறது.

இதனால், எதற்காக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள், எனவே மேயரிடம் இதுகுறித்து பேசவேண்டும் என்பதற்காக பலமுறை முயன்றேன். ஆனால், முடியவில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரித்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டேன் என கூறியுள்ளார்.

விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இவர் மீதான தண்டனை விவரம் அறிவிக்கப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்