ஜேர்மனிய அறிஞர் கார்ல் மார்க்ஸின் கையெழுத்து பிரதி: 5 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம்!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனிய பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி, 5 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

ஜேர்மனி நாட்டின் பொருளாதார அறிஞரும், கம்யூனிஸவாதியுமான கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்தநாள் இம்மாதம் வருகிறது. இதனையொட்டி, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அவர் எழுதிய 'Das Kapital' புத்தகத்தின் ஒற்றைப் பக்கம் ஏலத்தில் விடப்பட்டது.

சுமார் 1,250 பக்கங்களுக்கும் மேற்பட்ட இந்த புத்தகத்தை, கார்ல் மார்க்ஸ் கடந்த 1850 முதல் 1853ஆம் வரை லண்டனில் மூலதனம் குறித்து எழுதினார். இந்த புத்தகத்தின் ஒற்றைப் பக்கத்தில் கார்ல் மார்க்ஸின் கையெழுத்து பிரதி இருந்தது.

இதனை பெய்ஜிங்கின் பெங் லன் என்பவர் வைத்திருந்தார். இந்நிலையில், இந்த கையெழுத்து பிரதி 5 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இந்த விலையானது அடிப்படை விலையை விட பத்து மடங்கு அதிகமாகும். இதேபோல், கார்ல் மார்க்ஸின் நண்பரும், பொருளாதார அறிஞருமான பிரட்ரிக் ஏங்கெல்ஸின் 'Communist Manifesto' என்ற புத்தகம் 2 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது.

‘Das Kapital' புத்தகம் பொருளாதாரத்தில் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ள உலகின் தலைசிறந்த நூலாக கருதப்படுகிறது.

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers