விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
392Shares
392Shares
lankasrimarket.com

ஜேர்மனில் உள்ள Hamburg விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறை காரணமாக அங்கிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு இன்று முழுவதும் விமான நிலையத்திற்கு விமுடுறை அளிக்கப்பட்டது.

திடீர் மின்பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய முடியாத காரணத்தால், அனைத்து பயணிகளும் விமானநிலையத்தில் இருந்து வெளியேறுமாக அறிவித்தல் விடப்பட்டது.

இந்த அறிவிப்பையடுத்து நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியேறினர். மேலும் வரவிருக்கும் பயணிகளுக்கும் இந்த அறிவித்தல் விடப்பட்டது.

மேலும், இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் அனைத்தும் Hanover விமான நிலையத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அனைத்து பயணிகளும், Hanover விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Hamburg விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 300 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒரு வடத்திற்கு சுமார் 17 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் கட்டுப்படுத்துகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்