புகலிட விதிகளை கடுமையாக்கும் ஜேர்மன் மாகாணம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
212Shares
212Shares
lankasrimarket.com

தெற்கு ஜேர்மன் மாகாணமாகிய பவேரியா புகலிடம் கோருவோருக்கான கடுமையான விதிகளை நேற்று அறிமுகப்படுத்தியது.

நான்கு மாதங்களுக்குப்பின் முதன்முறையாக ஒரு புகலிட எதிர்ப்பு கட்சி தேர்தலில் பங்கேற்க உள்ள நிலையில் பவேரியாவின் கனசர்வேட்டிவ் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பவேரியாவின் The Christian Social Union (CSU) கட்சி புலம்பெயர்ந்தோருக்கான உதவித்தொகைகளைக் குறைக்கவும், அதிக புலம்பெயர்ந்தோரை அவர்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும், புகலிடம் கோரி வரும் புதிய புலம்பெயர்ந்தோரை தற்காலிக மையங்களில் வைக்கவும் விரும்புகிறது.

அது பாதுகாக்கப்படும் உரிமை இல்லாதவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்னும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க விரும்புவதாகவும், 2015இல் அகதிகள் பிரச்சனையின்போது இருந்த புலம்பெயர்தல் விதிகள் தற்போது மாறிவிட்டன என்னும் செய்தியை பொருளாதார அகதிகளுக்கு தெரியப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

தங்களது விதிகள் மொத்த ஜேர்மனிக்கும் ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என பவேரியா தெரிவித்துள்ளது.

அக்டோபரில் பவேரியா தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் பவேரியாவின் The Christian Social Union (CSU) கட்சி 40 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்