ரஷ்யாவை ஜி7 கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள முடியாது: ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Kabilan in ஜேர்மனி
242Shares
242Shares
lankasrimarket.com

உக்ரைனில் நிலவும் நெருக்கடி நிலையில் முன்னேற்றம் வரும் வரை, G7 கூட்டமைப்பில் ரஷ்யாவை சேர்த்துக் கொள்ள முடியாது என ஜேர்மனியின் Chancellor ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

G7 கூட்டமைப்பில் ரஷ்யாவை இணைத்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கனடா அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.

அதன்பின்னர் பிரித்தானியா, இத்தாலி மற்றும் பிரான்ஸ் உடனான சந்திப்பில் ஜேர்மனி Chancellor ஏஞ்சலா மெர்க்கல் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையில் முன்னேற்றம் காணும் வரை ரஷ்யா G7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஐரோப்பியர்களை உறுப்பினர்களாக கொண்ட G7 கூட்டமைப்பில், உக்ரைனில் நெருக்கடி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வரை ரஷ்யாவை திரும்பவும் இணைக்க முடியாது. இதற்கு G7 உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் நடக்கும் பிரச்சனைகளில் கணிசமான அளவு மாற்றங்கள் உண்டாகாவிட்டால், ரஷ்யா திரும்பவும் G7-யில் இணைய முடியாது என்ற வகையில் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

AAP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்