டிரம்பின் ட்வீட்கள் வருத்தமளிக்கச் செய்கின்றன: ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
113Shares
113Shares
lankasrimarket.com

G7 கூட்டமைப்பு மாநாட்டுக்குப்பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திகள் சற்று வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மேர்க்கல்

“எப்போதும் நான் இரண்டு தரப்பினரும் வெல்ல வேண்டும் என விரும்புபவள், ஆனால் டிரம்ப் அவ்வாறில்லாமல் தான் மட்டும் வெல்ல வேண்டும் என்று எண்ணுவதோடு மற்றவர்கள் தோற்க வேண்டும் என்றும் எண்ணுகிறாரோ என்று எனக்கு சில நேரங்களில் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

தொழில்துறை நாடுகள் ஏழு இணைந்த G7 கூட்டமைப்பின் ஏழு உறுப்பினர்கள் கையொப்பமிடும் பல முக்கிய விடயங்கள் அடங்கிய அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கையொப்பமிட முதலில் டிரம்ப் சம்மதித்தார்.

ஆனால் மாநாட்டை விட்டு புறப்பட்டு தனது விமானத்தில் ஏறிய சிறிது நேரத்தில் மாநாட்டை நடத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துகளை விமர்சித்து வரிசையாக ட்விட்டரில் செய்திகளை பதிவிட்டதன் மூலம் அவர் அந்த ஒப்பந்தத்தை உடைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்.

சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பிற்காக கூட்டத்திலிருந்து முன்னதாகவே வெளியேறிய டிரம்ப், ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டாம் என்று தனது அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.

இது குறித்து பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல், டிரம்ப் ஒப்பந்தத்திலிருந்து ட்விட்டர் மூலமாக வெளியேறியது தனக்கு சற்று வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் ஏமாற மாட்டோம் என்று கூறியுள்ள மெர்க்கல் நாங்களும் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்