திடீரென தீப்பிடித்து எரிந்த லுப்தான்சா விமானம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
283Shares
283Shares
lankasrimarket.com

ஜேர்மனில் Frankfurt விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த லுப்தான்சா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Philadelphia செல்வதற்காக இந்த விமானம் விமானநிலையத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான ஊழியர்கள் இரண்டு பேர் மற்றும் தீயணைப்பு வீரர்களின் 10 பேரின் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, தீவிபத்து ஏற்படும்போது பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை. மேலும் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்