விதிமுறையை மீறிய ஆடை: டயானாவை பின்பற்றும் மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
517Shares
517Shares
lankasrimarket.com

சமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெர்க்கல் அரச குடும்பத்து விதிமுறையை மீறி ஆடை அணிந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக இந்த பாரடே(Parade) நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட மெர்க்கல் தனது தோள்பட்டை தெரியும்படி மொடலாக ஆடை அணிந்திருந்தார். ஆனால் விருந்து விழாக்களை தவிர, இதுபோன்ற அரசகுடும்பத்து விழாக்களில் இந்த மாதிரி ஆடை அணியக்கூடாது.

ஆனால், அதனை மீறி மெர்க்கல் ஆடை அணிந்துள்ளார். இவர் இளவரசி டயானாவை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. ஏனெனில், அரச குடும்பத்து மருமகளாக இருந்தாலும் ஒரு சமான்யனை போலவே வாழ்வதற்கு டயானா விரும்பினார்.

குறிப்பாக, அரச குடும்பத்து விதிமுறைகளை இவர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. இதனையே தற்போது மெர்க்கல் பின்பற்றி வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், 1987 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் உள்ள Opera House- க்கு தனது கணவர் சார்லஸ் உடன் சென்றிருந்தபோது, டயானா தனது தோள்பட்டை தெரியும்வண்ணம் ஆடை அணிந்து சென்றுள்ளார்.

தற்போது, இந்த இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு, இளவரசி டயானாவை மெர்க்கல் பின்பற்றுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்