ஜேர்மனி ஆஸ்திரிய எல்லைப் பிரச்சினை: ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
201Shares
201Shares
ibctamil.com

ஜேர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான எல்லையை மூடுவது குறித்து ஜேர்மனியின் சான்ஸலருக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வேரையே பாதிக்கும் என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் எல்லையை மூடுதல் தடையற்ற போக்குவரத்து என்னும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளின் தூண்களில் ஒன்றையே அழிப்பதோடு மட்டுமின்றி அகதிகள் ஜேர்மனிக்கு அருகிலுள்ள ஆஸ்திரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு படையெடுப்பதற்கும் வழி வகுக்கும்.

இந்த மோதல் ஏற்கனவே கூட்டணிகளின் பலத்தில் உருவாக்கப்பட்டு ஊசலாடிக் கொண்டிருக்கும் ஜேர்மனி அரசை இன்னும் பாதிக்கும்.

எப்போதுமே ஏஞ்சலா மெர்க்கலின் அகதிகள் கொள்கையை விமர்சிக்கும் உள்துறை அமைச்சர் பொது அகதிகள் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக பிற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களையும் நிர்ப்பந்திப்பதற்காக மாநாடு ஒன்றைக் கூட்ட இருக்கிறார்.

ஏஞ்சலா மெர்க்கலோ தன்னைப் பொருத்தவரை ஐரோப்பாவில் அனைவரும் இணைந்து முடிவுகள் எடுப்பதுதான் தனக்கு முக்கியமே தவிர, தனியாக செயல்படுவது அல்ல என்று கூறுகிறார்.

உள்துறை அமைச்சரின் திட்டம், ஏஞ்சலா மெர்க்கல் 2015ஆம் ஆண்டு அறிவித்த அகதிகளை அனுமதிக்கும் கொள்கையையே முற்றிலும் தலைகீழாக்கிவிடும்.

இதற்கிடையில் இது குறித்து பேசுவதற்காக ஆஸ்திரிய சான்ஸலரான Sebastian Kurz பெர்லின் வந்தார்.

அதுபோல் இத்தாலியின் உள்துறை அமைச்சரான Matteo Salviniயும் ஜேர்மன் சான்ஸலரை சந்திக்க அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்