யூதச் சிறுமி துஷ்பிரயோக வழக்கில் ஜேர்மனியை குற்றம் சாட்டும் ஈராக்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
254Shares
254Shares
ibctamil.com

சூசன்னா என்னும் 14 வயது யூதச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து விட்டு ஈராக்கிற்கு தப்பியோடிய குற்றவாளியை நேரடியாக சென்று பிடித்து ஜேர்மனிக்கு கொண்டு வந்ததற்காக, ஈராக், ஜேர்மன் அரசு நீதியை தங்கள் விருப்பம்போல் வளைப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஜேர்மன் அதிகாரிகளோ தாங்கள் சட்டத்திற்குட்பட்டே செயல்படுவதாக வாதிடுகின்றனர். ஈராக்கிற்கும் ஜேர்மனிக்கும் நடுவில் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதுவும் பயன்பாட்டில் இல்லை.

எனவே சூசன்னாவை கொலை செய்த Ali B என்னும் அந்த குற்றவாளியை ஜேர்மனியிடம் ஒப்படைப்பது குறித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முன்னரே ஜேர்மனி குர்திஷ் அதிகாரிகளிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக ஈராக் ஜேர்மனியை குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்த விமர்சனத்தை நிராகரித்துள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை ஈராக் அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ எதிர்ப்போ தங்களுக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர்.

ஜேர்மனியின் சட்டங்கள் பலவற்றை மேற்கோள் காட்டியுள்ள ஜேர்மன் அதிகாரிகள் தாங்கள் எந்த சட்டத்தையும், ஒப்பந்தத்தையும் மீறவில்லை என வாதிடுகின்றனர்.

இந்நிலையில் ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட Ali B என்னும் அந்த குற்றவாளிக்கு சூசன்னாவின் கொலையில் உள்ள தொடர்பை உறுதி செய்வதற்காக DNA சோதனை ஒன்றின் முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்