ஏஞ்சலா மெர்க்கல் பதவி இழப்பாரா? உள் துறை அமைச்சரால் ஏற்பட்டுள்ள குழப்பம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் உள்துறை அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்கே உலை வைக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அகதிகள் குறித்து ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த நிலைப்பாட்டிற்காக எப்போதுமே அவரை கடுமையாக விமர்சிக்கும் உள்துறை அமைச்சரான Horst Seehoferஉடன் ஏஞ்சலாவுக்கு நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்குள்ளான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரவு நீண்ட நேரம் வரை நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால், மெர்க்கலின் CDU மற்றும் Seehoferஇன் CSU என்னும் எதிரிக் குழுக்கள் தங்களுக்குள் பேசி ஒரு சுமூகமான முடிவை எடுப்பதற்காக வியாழனன்று நடப்பதாக இருந்த நாடாளுமன்ற அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Seehofer புலம்பெயர்தல் மெகா திட்டம் ஒன்றை முன்வைக்கிறார், அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்கனவே பதிவு செய்த புகலிடம் தேடுவோர், முறையான ஆவணங்களுடன் ஜேர்மனிக்குள் வர முற்பட்டால் அவர்களை திருப்பி அனுப்பும் உரிமையை ஜேர்மன் எல்லை பொலிசாருக்கு அளிக்க வேண்டும் என்பதே அது. மெர்க்கல் இந்த திட்டத்தை நிராகரிக்கிறார், காரணம் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் தனித்து செயல்படுவதாக பார்க்கப்படும் என்றும் அது இத்தாலி மற்றும் கிரீஸ் போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு இன்னும் அதிக சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் அஞ்சுகிறார்.

பிறரை பாதிக்கும் ஒருதலைபட்சமான முடிவுகளை ஜேர்மனி எடுப்பதற்கு பதில், ஜூன் 28 - 29 ஆகிய திகதிகளில் உச்சி மாநாடு ஒன்றை நடத்த இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைக்குப் பின் ஒரு ஒருமித்த கருத்தை எட்டலாம் என அவர் கருதுகிறார்.

ஆனால் CSUவோ, இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டுக்காக காத்திருக்க முடியாது, நாம் கவலைப்பட வேண்டியது உள்ளூர் பிரச்சினைகளைக் குறித்துதானே ஒழிய மொத்த ஐரோப்பாவைக் குறித்தும் அல்ல என்கிறது.

இதனால் மெர்க்கலின் CDU மற்றும் Seehoferஇன் CSU இடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதோடு ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்கும் பிரச்சினை வரலாம் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers