ஜேர்மனி விடயத்தில் தேவையின்றி மூக்கை நுழைக்கும் டிரம்ப்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி அரசியலில் அகதிகள் பிரச்சினை காரணமாக ஆளுங்கட்சிக்கும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சிக்கும் மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போதுதான் சேன்ஸலர் ஏஞ்லா மெர்க்கலுக்கும் அவரை விமர்சிக்கும் உள்துறை அமைச்சரான Horst Seehoferக்கும் இடையேயான போர் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் தேவையின்றி திடீரென மூக்கை நுழைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குட்டையைக் குழப்ப முயல்கிறார் போல தெரிகிறது.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி ஒன்றில், “ஏற்கனவே வலிமையற்றிருக்கும் பெர்லின் கூட்டணியை அகதிகள் பிரச்சினை ஆட்டங்காண வைத்திருக்கும் சூழலில், ஜேர்மன் மக்களே அதன் தலைமைக்கெதிராக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனியில் குற்றம் அதிகரித்து வருகிறது. தங்கள் கலாச்சாரத்தை வலிமையாகவும் முரட்டுத்தனமாகவும் மாற்றிக் கொண்ட லட்சக்கணக்கான மக்களை அனுமதித்ததன்மூலம் ஐரோப்பா பெருந்தவற்றைச் செய்துள்ளது” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அகதிகள் பிரச்சினை குறித்து தனது ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுப்பதற்காக நேற்றுவரை ஏஞ்சலா மெர்க்கலை விமர்சித்து வந்த Seehofer இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்திருப்பதால் இருவருக்கும் இடையிலான உரசல்கள் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், டிரம்ப் தேவையில்லாமல் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

ஏஞ்சலா மெர்க்கல் அகதிகள் பிரச்சினை குறித்து தனது ஐரோப்பியக் கூட்டாளிகளுடன் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுக்கவில்லையென்றால், தனது புகலிட விண்ணப்பம் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் நிலுவையிலுள்ள யாராவது ஜேர்மனிக்குள் நுழைய முற்பட்டால் அவரை திருப்பி அனுப்பப் போவதாக Seehofer எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...