ஜேர்மனி வீரர்களை அவமானப்படுத்திய பத்திரிக்கையாளர்! என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in ஜேர்மனி

ஸ்வீடன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவர் ஜேர்மனி வீரர்களை கலாய்க்க வேண்டும் என்பதற்காகவே விமான டிக்கெட்டுடன் சென்ற சம்பவம் பரபரப்பையும் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் எப் பிரிவு ஆட்டத்தில் ஜேர்மன் அணி இன்று ஸ்வீடனை சந்திக்கிறது.

இது ஜேர்மன் அணிக்கு வாழ்வா? சாவா என்ற போட்டியாகும்.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் லுத்விக் ஹோல்ம்பர் , ஜேர்மனி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஜேர்மனி வீரர்களுக்கான டிக்கெட்டுகளை அந்த அணி வீரர் சமி கேதிராவிடம் கொடுத்து இது உங்களுக்கு தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

அதாவது இன்று ஸ்வீடன் அணி வெற்றி பெறும், ஜேர்மனி அணி தோல்வியடைந்து வீட்டிற்கு செல்லும் என்ற நோக்கில் இப்படி செய்துள்ளார்.

ஆனால் ஜேர்மனி வீரர் சமி கேதிரா, இது எங்களுக்கு தேவைப்படாது. இன்றைய போட்டியில் நிச்சயம் வெல்வோம்.

தேவைப்படுமானால் இது எங்களுக்கு ஜுலை 16-ஆம் திகதி தேவைப்படலாம், அதாவது அவர் இறுதிப்போட்டிக்கு பிறகு தேவைப்படலாம் என்று சற்றும் சலனம் இல்லாமல் கூறியுள்ளார்.

மேலும் இதைக் கண்ட ஜேர்மனி ரசிகர்கள் சிலர் இது நகைச்சுவையாகவே இருந்தாலும், ஜேர்மனி வீரர்களை அவமானப்படுத்தும் வகையிலே உள்ளது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...