ஏஞ்சலா மெர்க்கல் ஏமாற்றிவிட்டார்: கூறும் இந்த பிரபலம் குறித்த சுவாரஸ்ய தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
110Shares
110Shares
lankasrimarket.com

டிரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும் சமயத்தில் தனக்கு ஜேர்மனி புகலிடம் கொடுப்பது எளிதாக இருந்திருக்கும், ஆனால் ஏஞ்சலா மெர்க்கல் தனக்கு புகலிடம் அளிக்க மறுப்பது ஏமாற்றமளிக்கிறது என்கிறார் Edward Snowden என்னும் பிரபலம்.

இவர் அமெரிக்காவின் National Security Agencyயின் ரகசியங்கள் சிலவற்றை வெளியிட்டதற்காக அமெரிக்காவால் தேடப்படும் உளவாளியாவார்.

2013 முதல் ரஷ்யாவில் வசித்துவரும் Edward Snowden, அமெரிக்க அதிபர் - ரஷ்ய அதிபருக்கிடையிலான சந்திப்பு நடைபெற்றால் தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்படி அதிபர் டிரம்ப் புடினைக் கேட்கலாம் என அஞ்சுகிறார். இதனால ஜேர்மனியிடம் புகலிடம் கோரிய அவரது கோரிக்கை ஜேர்மனி சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தான் வெளியிட்ட ரகசியங்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் கூறும் Edward Snowden, தான் இனி பயங்கர பின் விளைவுகளைக் கொண்ட வாழ்வை எதிர் கொள்ளப் போவதை அறிந்துள்ளதாகவும் கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடம்பெயர Edward Snowden விருப்பம் தெரிவித்த நிலையில், ஜேர்மனியிலிருக்கும் அவரது வழக்கறிஞரான Wolfgang Kaleck, சட்டபூர்வமாக ஐரோப்பாவிற்குள் நுழைவது எளிது என்றாலும் அரசியல் ரீதியாக அதை அனைவரும் தடுத்து விட்டார்கள் என்கிறார்.

இன்னும் ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிடம் பேச்சு வார்த்தைகள் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்