ஏஞ்சலாவுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுத்த உள்துறை அமைச்சர்: என்ன மாற்றங்கள் நிகழும்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
159Shares
159Shares
lankasrimarket.com

அகதிகள் பிரச்சினையில் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய இருப்பதாக மிரட்டியுள்ள உள்துறை அமைச்சர் Horst Seehofer, அவருக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

அடுத்த மூன்று நாட்களில் எனது இரண்டு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வேன் என்று Horst Seehofer தெரிவித்தார்.

அவர் ஃபெட்ரல் அரசில் உள்துறை அமைச்சராகவும் CSU கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இன்று மதியம் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் Horst Seehofer, ஒரு நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் தனது பொறுப்புகளில் தொடர்வதா அல்லது ராஜினாமா செய்வதா என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறார்.

வேறு ஐரோப்பிய நாடுகளில் பதிவு செய்துள்ள புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்பும் தனது திட்டத்திற்கு மெர்க்கலை சம்மதிக்க வைப்பதில் தோல்வியுற்ற Horst Seehofer, தனது சக கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றபின் தனக்கு ஆதரவு எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.

பேச்சு வார்த்தைகளின் முடிவைப் பொறுத்து Horst Seehofer தனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்ய இருக்கும் நிலையில், அவரது கட்சியான CSU மற்றும் SPDயுடனான ஏஞ்சலாவின் கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏஞ்சலா மெர்க்கல் தனது முடிவில் உறுதியாக இருந்து Horst Seehofer ராஜினாமா செய்யும் பட்சத்தில், கூட்டணியில் தொடர CSU விரும்பினால் Horst Seehoferக்கு பதிலாக இன்னொரு உள்துறை அமைச்சரை அக்கட்சி நியமிக்கலாம்.

அல்லது ஏஞ்சலா மெர்க்கலுடனான நீண்ட கால கூட்டணியை முறித்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் அவரது பெரும்பான்மையை இழக்கச் செய்து ஜேர்மனியை ஒரு அரசியல் குழப்பத்திற்குள்ளாக்கலாம்.

அல்லது ஏஞ்சலா மெர்க்கல் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவோ அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டு ஒரு வேளை புதிய தேர்தல்களுக்கு வழி வகுக்கவோ செய்யலாம்.

எப்படியிருந்தாலும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் விடயத்தில் மட்டும் ஏஞ்சலா மெர்க்கல் மாறியதாக தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்