ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலாவின் தலை தப்பியது: புதிய ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
209Shares
209Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer ஒரு வழியாக தனது ராஜினாமா மிரட்டலில் இருந்து பின்வாங்கியதையடுத்து ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலாவின் CSU கட்சியுடனான கூட்டணி உடையும் அபாயம் நீங்கியது.

ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலம்பெயர்தலுக்கு பதிவு செய்துள்ளவர்கள் ஜேர்மனிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக ஆஸ்திரிய எல்லையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க சம்மதம் தெரிவித்ததையடுத்து ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer தனது ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கினார்.

பல மணி நேர பேச்சு வார்த்தைளுக்குப்பின் அவர் தனது ராஜினாமா முடிவிலிருந்து பின்வாங்கினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், CDU மற்றும் CSU கட்சிகளுக்கிடையே நடைபெற்ற தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு ஜேர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே உள்ள எல்லை வழியாக சட்ட விரோதமாக அகதிகள் நுழைவதை எதிர் காலத்தில் எவ்வாறு தடுப்பது எனும் ஒரு முடிவை எட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

GETTY IMAGES

இது போக CSU கட்சியின் முக்கிய அதிகாரிகளும் அவர்கள் ஏஞ்சலா மெர்க்கலின் CDU கட்சியுடனான அரசில் இணைந்திருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டம் ஒன்றில் இரண்டு கட்சியினரும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர், ஆனால் அந்த கூட்டத்தில் Seehofer இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பவேரிய CSU பிரதமரான Markus Söderம், எந்த சமரசத்திற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தற்போது அரசிலிருந்து வெளியேறும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் ஏஞ்சலா மெர்க்கலின் பத்விக்கு வர இருந்த ஆபத்து நீங்கியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்