அமெரிக்காவுக்கு ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை

Report Print Fathima Fathima in ஜேர்மனி
142Shares
142Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் ஐரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரி விதித்தால் வர்த்தக போரை உருவாக்கும் என ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரித்துள்ளார்.

பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நேரடி வர்த்தகப்போர் ஏற்பட்டது, இந்நிலையில் ஜரோப்பிய யூனியனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் கூடுதல் வரிவிதிக்க தீவிரமாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளை பொறுத்தவரையில், ஜேர்மனியே அதிகளவு கார்களை இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்காவின் இந்த முடிவு ஜேர்மன் வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்காவில் உருக்கு, அலுமினியப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய யூனியனில் ஜீன்ஸ், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதனால் இருதரப்பிலும் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது, இன்னும் கார்களுக்கு வரி உயர்த்தப்பட்டால் வர்த்தக போரை உருவாக்கும்.

அமெரிக்காவே பெரும்பாலான விடயங்களில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பலன்களை பெற்றுவருகிறது, டிரம்ப் மிகவும் பழைமையான முறையில் வர்த்தக விஷயத்தை அணுகுகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்